100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 5,000 இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 5,000 இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
X
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 5,000 இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
அருப்புக்கோட்டை அருகே ரெட்டியபட்டி ஒத்தக்கடை பகுதியில் 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 5,000 இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே ரெட்டியபட்டி ஒத்தக்கடை பகுதியில் 100 நாள் வேலைத்திட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் ரூ 5,000 வழங்கிட வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்த தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய கூலி பாக்கியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும், தினசரி ஊதியத்தை ரூபாய் 600 ஆக உயர்த்தி வழங்கிட வேண்டும், பேரூராட்சிகளுக்கும் நகராட்சிகளுக்கும் 100 நாள் பணியை விரிவு படுத்திட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், 100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செல்வம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தை மாவட்ட செயலாளர் செந்தில்குமார் துவக்கி வைத்து கண்டன உரை நிகழ்த்தினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட குழு முருகன், ராஜேஸ்வரி, விவசாய சங்கம் அய்யனார், இந்திய கம்யூனிஸ்ட் கிளை செயலாளர் ராமச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் இந்திய கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க முழக்கங்கள் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட குழு குருசாமி, பெரியணன், ஒன்றிய பொருளாளர் ஜீவானந்தம், கட்டுமான சங்க மாவட்ட தலைவர் தங்கராஜ், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் மருதுபாண்டி, விவசாய சங்க மாவட்ட தலைவர் சங்கரபாண்டி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story