100 நாள் வேலை திட்டம்: மத்திய அரசை கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் 9 இடங்களில் ஆா்ப்பாட்டம்!

100 நாள் வேலை திட்டம்: மத்திய அரசை கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக சாா்பில் 9 இடங்களில் ஆா்ப்பாட்டம்!
X
100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ள மத்திய அரசையும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க.வையும் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட மதச் சாா்பற்ற கூட்டணி கட்சிகளின் சாா்பில், புதன்கிழமை (டிசம்பர் 24) 9 இடங்களில் ஆா்ப்பாட்டம்.
100 நாள் வேலைத் திட்டத்தை முடக்கும் சட்டத்தை கொண்டு வந்துள்ள மத்திய அரசையும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க.வையும் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட மதச் சாா்பற்ற கூட்டணி கட்சிகளின் சாா்பில், புதன்கிழமை (டிசம்பர் 24) 9 இடங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது.இதுகுறித்து, நாமக்கல் கிழக்கு திமுக மாவட்டச் செயலாளரும் பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் எம்பி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது...
திமுக தலைவா் மு.க. ஸ்டாலின் அவா்களின் அறிவுறுத்தலின் படியும், இளைஞா் அணி செயலா், தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்டத்தை சிதைத்து, கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை முடக்க நினைக்கும் மத்திய பாஜக அரசையும், அதற்கு துணை போகும் அ.தி.மு.க.வையும் கண்டித்து நாமக்கல் கிழக்கு மாவட்ட மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் புதன்கிழமை(டிசம்பர்24) காலை 9.30 மணிக்கு கீழ் கண்ட வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது அதன் விவரம் வருமாறு...
நாமக்கல் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் நடைப்பெறும் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி தலைமையில்,நீலவானத்து நிலவன்(விசிக) அன்புமணி(இந்திய கம்யூனிஸ்ட் கட்சி)அல்ஹாஜ் கே.தவுலத்கான்,ஐக்கிய அமாத் அனைத்து பள்ளி மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கம்,மணிமாறன், (ஆதி தமிழர் பேரவை) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
புதுசத்திரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பெ.இராமலிங்கம் எம்எல்ஏ தலைமையில்,
கந்தசாமி(மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) குமரவேல் (தமிழ் புலிகள் கட்சி) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் மாநில சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணைச் செயலாளர்.முனவர்.ஜான் தலைமையிலும்,சேந்தமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினரும், கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் மாவட்ட செயலாளர் (தெற்கு) எஸ்.மாதேஸ்வரன்.,எம்.பி. தலைமையில் திமுக மாநில மகளிர் தொண்டர் அணி துணைச் செயலாளர் ஜே.ரேகா பிரியதர்ஷினி,சா.சேகர்(மதிமுக)முகமதுமுபீன், (இந்திய யூனியன் முஸ்லீம் லீக்)சுல்தான் பாஷா,(மனிதநேய மக்கள் கட்சி) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
கொல்லிமலை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் தமிழ்நாடு பழங்குடியினர் நலவாரிய தலைவர் கனிமொழி தலைமையில், எருமப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் திமுக மாநில மகளிர் தொண்டரணி செயலாளர் ப.இராணி தலைமையில், சித்திக் (இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி) முன்னிலையிலும்,இராசிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் திமுக தீர்மானகுழு துணைத்தலைவர் பார் இளங்கோவன் தலைமையில் மும்பை அர்ஜுனன்(விசிக)ராவணன்,(ஆதி தமிழர் கட்சி)நீலவேங்கை(ஆதி தமிழர் பேரவை) ஆகியோர் முன்னிலையிலும்,வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் திமுக மாவட்ட பொருளாளர் ஏ.கே.பாலச்சந்திரன் தலைமையில்,வினோத் சேகுவேரா(தமிழ் புலிகள் கட்சி) முன்னிலையிலும்,
நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் திமுக மாநில நெசவாளர் அணி தலைவர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் கண்டண ஆர்ப்பாட்டம் என 9 இடங்களில் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு அந்தந்த தி.மு.க. ஒன்றியச் செயலா்களின் தலைமையிலும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் முன்னிலைலும் நடைபெறவுள்ளது என்று அதில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.*
Next Story