ரூ.100 கோடியில் மாவட்ட தலைமை மருத்துவமனை பணி- முதல்வர் துவக்கி வைப்பு

ஒசூர் அருகே 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை பணிகளை காணொளி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.. இந்தநிலையில், ஒசூர் அடுத்த அச்செட்டிப்பள்ளி ஊராட்சிக்குட்பட்டு காரப்பள்ளி அருகே 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கட்டிடம் கட்டும் பணிகளை காணொளி மூலமாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார் 419 படுக்கைகள் கொண்ட பல்வேறு வசதிகளுடன் இம்மருத்துவமனை அமைய உள்ளதாகவும், இம்மருத்துவமனை 18 மாதங்களில் நிறைவடைந்து பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.. முதலமைச்சர் காணொளி வாயிலாக தொடக்கி வைத்த நிகழ்ச்சியில் உணவு பாதுகாப்புத்துறை அமைச்சர் சக்கரபாணி, மாவட்ட ஆட்சியர் சரயு, எம்எல்ஏ பிரகாஷ், மேயர் சத்யா, ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாச ரெட்டி உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.. அதனைதொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கலெக்டர், எம்எல்ஏ, மேயர் ஆகியோர் மருத்துவமனை அமைய உள்ள இடத்தில் அடிக்கல் நாட்டினர்.

Tags

Next Story