ஏக்கத்தில்100 நாள் வேலைத்திட்ட பணியாளர்கள்

.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த மாவட்ட எல்லை பகுதியாக அமைந்துள்ள வெள்ளை குட்டை கிராமப் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் பயன் பெற்று வருவதாகவும் திடீரென ஐந்து மாத காலமாக ஊதியம் கிடைக்கவில்லை என பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர் ஏரி பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் உள்ள வேலைகளை மேற்கொள்வதன் மூலம் அரசு தங்களுக்கு வருமானம் அளித்து வருவதாகவும் திடீரென ஐந்து மாதம் ஊதியம் வழங்காததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

எதிர்வரும் தீபாவளி தினத்தில் புத்தாடைகள் மற்றும் பூண்டு வெங்காயம் வாங்கக் கூட எங்களிடம் பணம் இல்லை என பகுதி மக்கள் புலம்புகின்றனர் பண்டிகை தினங்களில் மட்டுமே மாமிசம் சாப்பிடுவதாகவும் அதற்கு கூட வழி இல்லாமல் போய்விடுமோ என்ற ஏக்கத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

எனவே கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேசிய ஊராக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் நிலுவையில் உள்ள ரூபாய்,86,39,95,341 எண்பத்தி ஆறு கோடியே முப்பத்தி ஒன்பது லட்சத்து தொண்ணுற்று இந்தாயிரத்து முண்ணுத்தி நாற்பத்தி ஒரு ரூபாய் பணத்தை மாவட்ட ஆட்சியர் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story