100நாள் வேலை சம்பள நிலுவை: காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்
சீர்காழியில் நூறு நாள் வேலை சம்பளம் வழங்காத ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில், காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மகாத்மா காந்தி, தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ், நிதி ஒதுக்கீடு செய்யாத ஒன்றிய அரசை கண்டித்து, காங்கிரஸ் கட்சி, மாநில பொது செயலாளர், கனிவண்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, காங்கிரஸ் கட்சியின் , மயிலாடுதுறை மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை எம்எல்ஏவுமான, ராஜ்குமார் பங்கேற்று கண்டன உரையாற்றினார். தொடர்ந்து,100 நாள் வேலைத்திட்டத்தில், நிலுவையில் உள்ள, சம்பள பாக்கியை, உடனடியாக வழங்க வேண்டும் என, கண்டனம் முழக்கங்கள் எழுப்பினர் .
Tags
Next Story