பறக்கும் படையால் ரூ.1.00 லட்சம் பறிமுதல்

அய்யம்பாளையம் கிராமம், டாஸ்மாக் கடை அருகில் பறக்கும் படையினர் வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ஜெயபிரகாஷ் என்பவரால் கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் கைப்பற்றப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024-ஐ முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டம், பழனி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அய்யம்பாளையம் கிராமம், டாஸ்மாக் கடை அருகில் பறக்கும் படையினர் வாகன சோதனையின்போது உரிய ஆவணங்கள் ஏதுமின்றி ஜெயபிரகாஷ் என்பவரால் கொண்டுவரப்பட்ட ரூ.1 லட்சம் கைப்பற்றப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது. உரிய பாதுகாப்பு கருதி மேற்படி தொகையினை உதவி கருவூல அலுவலர், சார் கருவூலம் அவர்களிடம் செவ்வாய்க்கிழமை மதியம் 2 மணி அளவில் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story