நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவிகித பேருந்துகள் இயக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் 100 சதவிகித பேருந்துகள் இயக்கம் - ஆட்சியர் ச.உமா தகவல்.

நாமக்கல் மாவட்டத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், 100 சதவிகிதம் பேருந்துகள் இயக்கப்படுவதை நாமக்கல் பேருந்து நிலையத்தில், இன்று (09.01.2024) மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, நாமக்கல் மாவட்டத்தில் 239 பேருந்துகள் நாள்தோறும் இயக்கப்படுகிறது. இப்பேருந்துகளுக்கு சுமார் 400-க்கும் மேற்பட்ட ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் பணி அமர்த்தப்படுகின்றனர். நாமக்கல் மாவட்டத்திலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் பாதுகாப்பாகவும், குறித்த நேரத்திலும் 100 சதவிகிதம் இயக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்றைய தினம் இயக்கப்படும் பேருந்துகள் எந்தவொரு இடையூறுமின்றி இயங்கும் பணிகள் 400 காவல்துறையினர் மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பணிக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் பிற பயணியர்கள் தடையின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் 100 சதவிகிதம் நாமக்கல் மாவட்டத்தில் அரசு போக்குவரத்து கழகத்தின் பேருந்துகள் இயக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் ச.உமா தெரிவித்தார். இந்த ஆய்வுகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ் கண்ணன், நாமக்கல் வருவாய் கோட்டாட்சியர் மா.க.சரவணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக கோட்ட மேலாளர் ஆர்.கணேஷ்குமார், நாமக்கல் வட்டாட்சியர் சி.சக்திவேல் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story