100 சதவீத பேருந்து போக்குவரத்து சேவை தொடக்கம்

100 சதவீத பேருந்து போக்குவரத்து சேவை தொடக்கம்

பேருந்து சேவையை தொடக்கி வைத்த அமைச்சர் 

தூத்துக்குடியில் விரைவில் 100 சதவீத பேருந்து போக்குவரத்து சேவை துவங்கும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

தூத்துக்குடியில் விரைவில் 100 சதவீத பேருந்து போக்குவரத்து சேவை துவங்கும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்கள் கனமழையால் பாதிக்கப்பட்ட நிலையில், போக்குவரத்து பணிமனைகளையும், நீரில் மூழ்கிய பேருந்துகளையும் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் "நெல்லை மாவட்டத்தில் 95 சதவீத பேருந்து போக்குவரத்து இயக்கப்படுவதாகவும், தூத்துக்குடியில் 45 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், வெள்ளநீர் வடிந்ததும் விரைவில் 100 சதவீத பேருந்து போக்குவரத்து சேவை இயக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களிலும் போக்குவரத்து சேவை முழுமையாக இயக்கப்படுகிறது" என்று தெரிவித்தார்.

Tags

Next Story