100 சதவீதம் வாக்குப்பதிவு - அரசு பேருந்துகளில் விழிப்புணர்வு

உறுதிமொழி ஏற்பு
தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வரும் 19ல் நடக்கிறது. இத்தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவுக்கு, தேர்தல் ஆணையமும், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்குதல், பொது இடங்களில் 'பிளக்ஸ்' பேனர் அமைத்தல், மனித சங்கிலி, உறுதிமொழி ஏற்பு, நாட்டுப்புற கலைநிகழ்ச்சி, ராட்சத பலுான் பறக்கவிடுவது என, பல வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதில் ஒரு பகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு பேருந்துகளின் முகப்பு கண்ணாடியில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு குறித்து ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில், 100 சதவீத ஓட்டு, இந்தியர்களின் பெருமை, பணம் வாங்காமல் நேர்மையாக ஓட்டளிப்போம் என உறுதி கொள்வோம். தேர்தல் விதிமீறல்களை நேரடியாக தெரிவிக்க cVIGIL செயலியை பயன்படுத்தவும், தேர்தல் பருவம், தேசத்தின் பெருமிதம் உள்ளிட்ட வாசகங்கள் இடம் பெற்று உள்ளன."
