தேர்தலில் 100 சதவீதம் ஓட்டுப்பதிவு: காஞ்சியில் 'பிளக்ஸ்' பேனர் வைப்பு
விழிப்புணர்வு பேனர்
தமிழகத்தில் ஏப்., 19ல் லோக்சபா தேர்தல்நடைபெறுகிறது. இத்தேர்தலில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவுக்கு, தேர்தல் ஆணையமும், காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகமும் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதில், 100 சதவீதம் ஓட்டுப்பதிவை வலியுறுத்தி பள்ளி, கல்லுாரி மாணவ- -- மாணவியர், மகளிர் குழுவினர் பங்கேற்கும் விழிப்புணர்வு பேரணி, பொது இடங்களில் விழிப்புணர்வு வாசகங்களுடன் வண்ண கோலமிடுதல், வாக்காளர்களுக்கு துண்டு பிரசுரம் வழங்குதல் என, விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதில், ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில்,பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில், பிளக்ஸ் பேனர் அமைத்துள்ளனர். இதில், லோக்சபா பொதுத்தேர்தல் 2024, வாக்காளர் என்பதில் பெருமை படுங்கள், ஓட்டளித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள். எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது.
100 சதவீதம் தவறாமல் ஓட்டளிப்போம் வாரீர், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர், காஞ்சிபுரம் என, குறிப்பிடப்பட்டுள்ளது."