காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு

காஞ்சிபுரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவு வலியுறுத்தி விழிப்புணர்வு

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் 

ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் நூறு சதவீத வாக்குப்பதிவு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற இலக்குடன் அனைத்து பகுதி மக்களுக்கும் மாவட்ட தேர்தல் நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் ,

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதியில் 100 சதவீத வாக்குப்பதிவு என்ற விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ராட்சத பலூன் மூலம் விழிப்புணர்வு மற்றும் இரண்டு கிலோமீட்டர் தூரம் விழிப்புணர்வு பேரணி ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துவக்கி வைத்தார்.

மேலும் முதல் முறை வாக்காளிக்க உள்ள கல்லூரி மாணவ , மாணவியர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து அனைவரும் வாக்களிப்போம் என்ற உறுதி மொழியை ஏற்றனர் . இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையம் அருகே இருந்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வருவாய் கோட்டாட்சியர் சரவண கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார், ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர் முத்து சுந்தரம் ஆகியோர் இணைந்து அனைவரும் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு கோஷத்துடன்,

2 கிலோமீட்டர் தூரம் பேரணியாக சென்றனர். வழி நெடுகிலும் இருந்த பொதுமக்கள், சாலையோர வியாபாரிகள், ஆட்டோ ஓட்டுநர்கள் ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி துண்டு பிரசுரங்கள் வழங்கி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இந்நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் , ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், மகளிர் சுய உதவி இயக்குனர் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Tags

Next Story