100 சதவீத வாக்குப்பதிவு - மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

100 சதவீத வாக்குப்பதிவு - மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு

உறுதிமொழி ஏற்ற மாணவர்கள் 

கள்ளக்குறிச்சி ஆர்.கே.எஸ்., கலை கல்லுாரியில் மாணவர்கள் 100 சதவீதம் வாக்களிக்க உறுதிமொழி ஏற்றனர்.

கள்ளக்குறிச்சி இந்திலி ஆர்.கே.சண்முகம் கலை அறிவியல் கல்லுாரியில் 100 சதவீதம் ஓட்டளிப்பதற்கான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. ஆர்.கே.எஸ்., கல்வி நிறுவனங்களின் நிர்வாக அலுவலர் மோகனசுந்தர் தலைமை தாங்கினார். கல்லுாரி வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ராஜா முன்னிலை வகித்தார். கல்லுாரி துணை முதல்வர் ஜான்விக்டர் வரவேற்றார். உதவிப்பேராசிரியர் ஹேமலதா வாழ்த்துரை வழங்கினார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட சமூகநலத்துறை ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ், பொது சமூகத்துறை சந்தியா, கணக்காளர் திவ்யபிரியா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, வரும் ஏப்., 19ம் தேதி நடக்கும் லோக்சபா தேர்தலில், வாக்களிக்க தகுதியுள்ள அனைத்து மாணவர்களும் வாக்களிக்க வேண்டும். ஊரில் உள்ள பொதுமக்களையும் 100 சதவீதம் வாக்களிக்க ஊக்குவிக்க வேண்டும்' என்றனர். தொடர்ந்து மாணவர்கள் சுவர் ஓவியம் வரைந்து அதில் வாசகங்கள் எழுதி கையெழுத்திட்டு, 100 சதவீத ஓட்டளிப்பதற்கான உறுதிமொழி ஏற்றனர். உடற்கல்வி ஆசிரியர் சரவணன் நன்றி கூறினார்.

Tags

Next Story