100 சதவீத வாக்குப்பதிவு - இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

சங்ககிரியில் நாடாளுமன்றத் தேர்தலில் நூறு சதவீதம் வாக்களிப்பதை வலியுறுத்தி இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சேலம் மாவட்டம், சங்ககிரி வருவாய்த்துறையின் சார்பில் வாக்காளர்கள் தேர்தலில் நூறு சதவீதம் வாக்காளிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நூறு சதவீதம் வாக்காளர்கள் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி நடைபெற்ற இரு சக்கர வாகன விழிப்புணர்வுபேரணியை நாமக்கல் மக்களவை தொகுதி உதவி தேர்தல் அலுவலரும், சங்ககிரி வருவாய் கோட்டாட்சியருமான லோகநாயகி கொடியசைத்து தொடங்கி வைத்தார். நகரின் முக்கிய வீதிகளின் வழியாக நடைபெற்ற பேரணியில் வட்ட வழங்கல் அலுவலர் அமுதா, வருவாய் ஆய்வாளர் கீதா உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story