மாற்றுத்திறனாளிகள் 100 சதவீத வாக்களிக்க விழிப்புணர்வு

மாற்றுத்திறனாளிகள் 100 சதவீத வாக்களிக்க விழிப்புணர்வு

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 100 சதவீத வாக்களித்தல் அவசியம் குறித்து விழிப்புணர்வு கோலம் போடப்பட்டது.


சேலம் கலெக்டர் அலுவலகத்தில் 100 சதவீத வாக்களித்தல் அவசியம் குறித்து விழிப்புணர்வு கோலம் போடப்பட்டது.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் இளம் தலைமுறை வாக்காளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனிடையே வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களுக்கான சிறப்பு பள்ளி ஆசிரியர்கள் இணைந்து விழிப்புணர்வு கோலம் வரைந்தனர். இந்த கோலத்தை மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான பிருந்தாதேவி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி கூறியதாவது:- நாடாளுமன்ற தேர்தல் நாளன்று வாக்குச்சாவடி மையங்களுக்கு நேரில் வந்து வாக்களிக்க விருப்பமுடைய மாற்றுத்திறனாளிகள் தேர்தல் ஆணைய செயலியில் தங்களது விவரம் குறித்து பதிவு செய்ய வேண்டும். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மூலம் அவர்களது வீடுகளில் இருந்து வாக்குச்சாவடிக்கு அழைத்து வந்து தங்களது ஓட்டை செலுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுதவிர நேரடியாக வாக்களிக்க வருகை தரும் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சாய்தள வசதி மற்றும் சக்கர நாற்காலி மற்றும் அதனை இயக்குபவருடன் தயார் நிலையில் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனவே மாற்றுத்திறனாளிகள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் உரிய நடவடிக்கை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Tags

Next Story