100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி விழிப்புணா்வு
விழிப்புணா்வு
100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கன்னிகாபுரம் கிராம மக்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
திருத்தணி அருகே மக்களவைத் தோ்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி கன்னிகாபுரம் கிராம மக்கள் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். அரக்கோணம் தொகுதிக்குட்பட்ட திருத்தணியில், மொத்தம், 330 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், வரும், 19-ஆம் தேதி நடைபெறும் தோ்தலில் 100 சதவீதம் வாக்காளா்கள் வாக்களிக்க வேண்டும் என உதவி தோ்தல் அலுவலவரும், திருத்தணி வருவாய் கோட்டாட்சியருமான தீபா தலைமையில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. அந்த வகையில் திருத்தணி ஒன்றியம் கன்னிகாபுரம் மற்றும் காா்த்திகேயபுரம் இருளா் காலனியில், 100 சதவீதம் வாக்குப்பதிவு அவசியம் குறித்து கோட்டாட்சியா் தீபா தலைமையில் விளம்பர பதாகைகள் ஏந்தி விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அதே போல் கே.ஜி.கண்டிகை பஜாரில், பள்ளி மாணவா்கள் மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணா்வு பாடல்கள், நாடகம் மற்றும் விளம்பர பதாகைகளுடன் பேரணி, துண்டு பிரசுரம் வழங்கி வாக்காளா்கள் இடையே விழிப்புணா்வு ஏற்படுத்தினா். நிகழ்ச்சியில், திருத்தணி வட்டாட்சியா் மதியழகன், வருவாய் ஆய்வாளா்கள் கமல், வித்யா லட்சுமி மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் பங்கேற்றனா்.
Next Story