100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு பிரசுரம்
விழிப்புணர்வு பிரசுரம்
கள்ளக்குறிச்சியில் 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு பிரசுரம்.
லோக்சபா தேர்தலில் 100 சதவீத ஓட்டுபதிவை வலியுறுத்தி இஸ்லாமியர்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் சங்கராபுரம் மற்றும் ரிஷிவந்தியம் வட்டார பகுதிகளுக்குட்பட்ட வடபொன்பரப்பி, சின்னகொள்ளியூர், வடமாமந்துார், தக்கா, மணலுார்பேட்டை பள்ளி வாசல்களில் ரம்ஜான் பண்டிகையொட்டி தொழுகைக்கு வந்த இஸ்லாமிய மக்களிடம் அங்கன்வாடி மைய பணியாளர்கள் 100 சதவீத ஓட்டுபதிவை வலியுறுத்தி துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும், லோக்சபா தேர்தலில் அனைவரும் தவறாமல் ஓட்டளிக்க வேண்டும் என்றும் எடுத்துரைத்தனர்.
Next Story