100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய கல்லூரி மாணவர்கள் !
100% வாக்குப்பதிவு விழிப்புணர்வு
100% வாக்குப்பதிவு- இந்திய வரைபட வடிவில் நின்ற கல்லூரி மாணவர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
கோவை:தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்தும், 100% வாக்குப்பதிவு குறித்தும் அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. கோவை மாவட்டத்திலும் பொதுமக்கள் இடையே இது குறித்து தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று கோவையில் பொள்ளாச்சி சாலையில் உள்ள ரத்தினம் கலை அறிவியல் கல்லூரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.இதில் சுமார் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட முதல் வாக்காளர்களாகிய கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.அவர்களுக்கு 100% வாக்குப்பதிவு வாக்களிப்பதன் அவசியம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கோவை மாவட்ட ஆட்சித் தலைவரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமார் பாடி கலந்து கொண்டார். அவர் தலைமையில் கல்லூரி மாணவர்கள் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.அதனைத் தொடர்ந்து கையெழுத்து இயக்க பேனரில் கையெழுத்திட்டனர். மேலும் இந்நிகழ்வில் 100% வாக்குப்பதிவினை உறுதி செய்யும் வண்ணம் மாணவர்கள் இணைந்து இந்திய வரைபட வடிவில் நின்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Next Story