100% வாக்குப்பதிவு- பயணிகளிடம் துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு
துண்டு பிரசுரங்கள் வழங்கல்
10டெங்கும் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முதல் கட்டமாக தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைவரும் வாக்களித்து 100% வாக்குப்பதிவு நடைபெறுவதற்காக அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். வாக்களிக்க வேண்டியது
ஒவ்வொரு வாக்காளரின் உரிமை என்ற போதும், ஜனநாயக நாட்டில் வாக்களித்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்த இயலாது. அதேசமயம், வாக்காளர்களின் பெரும்பான்மை பெற்ற அரசாக அமைந்தால்தான் ஆட்சியும் சிறப்பாக அமையும். இதனை வலியுறுத்தும் விதமாக, இன்று கரூர் மாவட்டம், கடவூர் பகுதியில்,
தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அப்பகுதியில் செல்லும் பேருந்துகளில் உள்ளே சென்று, பயணிகளிடம் ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தி, அது தொடர்பான தொண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும், நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.