100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு தொடர் ஓட்டம்!
திருவண்ணாமலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு தொடர் ஓட்டம் நடைபெற்றது.
பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணா நுழைவு வாயில் அருகே 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது . அரசு துறை அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்ற விழிப்புணர்வு தொடர் ஒட்டத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.பாஸ்கர பாண்டியன் இன்று (17.04.2024) கொடியசைத்து தொடங்கி வைத்தார்.தொடர் ஒட்டத்தில் கலந்து கொண்டு ஆட்சியர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Next Story