1000 மாணவர்கள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை நிகழ்ச்சி.

ஆரணி, ஆக 25. ஆரணியில் அரிமா சங்கம் சார்பில்1000 மாணவர்கள் பரதநாட்டியம் ஆடி உலக சாதனை நிகழ்ச்சியினை சேவூர் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்
ஆரணி சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளி ஆடிட்டோரியத்தில் ஆரணி அரிமா சங்கம் மற்றும் போர்ச்சபாய் நாட்டியாலயா பள்ளியும் இணைந்து 1000 மாணவர்கள் பங்கேற்று உலக சாதனைக்காக பரதநாட்டியம் ஆடும் நிகழ்ச்சியினை நடத்தினர். இந்நிகழ்ச்சியை “விருட்சா புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டு” உலக சாதனைக்காக பதிவு செய்தது. இந்நிகழச்சியை முன்னாள் அமைச்சரும், ஆரணி எம்எல்ஏவுமான சேவூர் எஸ்.இராமச்சந்திரன், அதிமுக மத்திய மாவட்டசெயலாளர் எல்.ஜெயசுதா ஆகியோர் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். நாட்டிய நிகழச்சியில் பஞ்ச பூதங்கள், தண்ணீர் தூய்மை செய்தல், பஞ்சாக்ர நிருத்தியாஞ்சலி உள்ளிட்ட நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் நடன ஆசிரியர் எம்.சூர்யா வரவேற்றார். ஆரணி அரிமா சங்க தலைவர் எம்.மோசஸ், செயலாளர் முருகானந்தம், பொருளாளர் பரசுராம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் நகர செயலாளர் அசோக்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் ஜெயபிரகாஷ் நகர மன்ற உறுப்பினர்கள் குமரன். பாரதிராஜா. சதீஷ்குமார். சுதா குமார். விநாயகம்.லயன்ஸ் இந்திரராஜன், சேகர் டி.தமிழ்ச்செல்வன், வி.சாய்ராம், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Next Story