1000 ஆண்டிற்கு மேல் பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் தின விழா.

1000 ஆண்டிற்கு மேல் பழமை வாய்ந்த தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் தின விழா.
ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் நகர் பகுதியில் அமைந்துள்ள 1000 ஆண்டுகள் மிகவும் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்பு மிகுந்த தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் இன்று கிறிஸ்துமஸ் தின விழாவை முன்னிட்டு காலை முதலே சிறப்பு திருப்பலிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று நள்ளிரவு சரியாக 12 மணி அளவில் குழந்தை இயேசு பிறப்பிற்கான நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வினைக்கான போளூர் செல்வம்பேட்டை சகாய நகர் வெண்மணி ரெண்டேடிப்பட்டு குன்னத்தூர் பெரியகரம் புலிவானந்தல் உள்ளிட்ட பல்வேறு சுற்று வட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் குழந்தை இயேசு பிறப்பு நிகழ்ச்சியை கண்டு களித்தனர். பின்னர் தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் பங்குத்தந்தை பிரான்சிஸ் பீடோ தலைமையில் சிறப்பு திருப்பலி பூஜைகளும் ஜெபங்களும் நடைபெற்றது . பின்னர் கிறிஸ்தவர்கள் ஒருவரை ஒருவர் ஆறத் தழுவி தங்களது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டனர். கிறிஸ்தவர்களின் புனித தினமாக கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தூய இருதய ஆண்டவர் ஆலயம் அலங்கரிக்கப்பட்டு மின் ஒளியில் ஜொலித்தது குறிப்பிடத்தக்கது.
Next Story