1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கோதண்ட ராமசாமி திருக்கோவிலில் வைகாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சீனிவாச பெருமாள் 'கோவில் உலா': திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.

1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கோதண்ட ராமசாமி திருக்கோவிலில் வைகாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சீனிவாச பெருமாள் கோவில் உலா: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
X
அரியலூரில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு கோதண்ட ராமசாமி திருக்கோவிலில் வைகாசி மாத முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சீனிவாச பெருமாள் 'கோவில் உலா': திரளான பக்தர்கள் சாமி தரிசனம். செய்தனர்.
அரியலூர், மே.17- அரியலூர் பெருமாள் கோவில் தெருவில் உள்ள அருள்மிகு கோதண்ட ராமசாமி கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயமாகும். இது 7 அடி உயரம் உள்ள தசாவதார சிற்பங்கள் உள்ள சிறப்பு வாய்ந்த தலம் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் முதல் சனிக்கிழமையன்று சீனிவாசப் பெருமாள், கோவில் உள் சுற்றுப் பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பது வழக்கம். அதன்படி வைகாசி முதல் சனிக்கிழமையை முன்னிட்டு பட்டாடை அணிவிக்கப்பட்டு மலர்மாலைகளில் அலங்காரம் செய்யப்பட்ட பூதேவி, ஸ்ரீதேவி சமேத சீனிவாச பெருமாள் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் மேளதாளங்கள் முழங்க கோவிலில் உள் சுற்று பிரகாரத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர். இதில் பக்தர்கள் தாயார் சமேத சீனிவாச பெருமாள் தரிசனம் செய்து வழிப்பட்டனர்.
Next Story