திருவள்ளூரில் தண்ணீர் இல்லாமல் வறண்ட 1,000 ஏரிகள் !

திருவள்ளூரில் தண்ணீர் இல்லாமல் வறண்ட 1,000 ஏரிகள் !

வறண்ட எரி

திருவள்ளூரில் தண்ணீர் இல்லாமல் வறண்ட 1,000 ஏரிகள். ஏரிகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் 586 ஏரிகளும், ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் 581 ஏரிகளும் உள்ளன. இந்த ஏரிகளின் நீர்வரத்து கால்வாய்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டி வீணாகி வருகின்றன. மேலும், பல ஏரிகளின் கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளதால், நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்படுகிறது. இதனால், நீர்வளத் துறையின் 586 ஏரிகளில் 500 ஏரிகளும், ஊரக வளர்ச்சி துறையின் 581 ஏரிகளில் 550 ஏரிகளும் நீரின்றி வறண்டு கிடக்கின்றன. மேலும், ஏரிகளில் துார் வாரும் பணி என்ற பெயரில் முறைகேடாக சவுடு மண் அள்ளப்பட்டதால், பல ஏரிகளில் நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தவிர, குப்பை கொட்டும் இடமாக ஏரிகள் மாற்றப்பட்டுள்ளதால், ஏரிகளை சீரமைக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர். நீர்வள ஆதார துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள பல ஏரிகள், அரசியல் கட்சியினரின் தலையீட்டால் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை. ஏரிகளுக்கு வரும் நீர்வரத்து கால்வாய் புதர்மண்டி இருப்பதால், நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் 1,050 ஏரிகள் நீரின்றி வறண்டுள்ளன' என்றனர்.

Tags

Next Story