பாதுகாப்பு பணியில் 1000 போலீசார் : எஸ்பி ஹர்ஷ்சிங்

பாதுகாப்பு பணியில் 1000 போலீசார் : எஸ்பி ஹர்ஷ்சிங்

எஸ்பி ஹர்ஷ் சிங் 

நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹர்ஷ் சிங் உத்தரவின் பேரில் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வாக்கு எண்ணும் மையம் மற்றும் மாவட்டம் முழுவதும் சுமார் 1000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாகை மாவட்டதில் 2024 பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று 04.06.2024 எண்ணப்பட உள்ள நிலையில் நாகை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது. நாகை பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மின்னணு வாக்கு இயந்திரங்கள் மூலம் பதிவான வாக்குகள் என்னப்பட உள்ள நிலையில் தீவிர பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் வாக்கு என்னும் மையத்தில் மட்டும் சுமார் 700 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் வாக்கு என்னும் மையங்களை தவிர்த்து மற்ற இடங்களில் காவல் துறையினர் ரோந்து சுற்றி வருவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் முழுவதும் உள்ள முக்கிய அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள்,பொது இடங்கள் வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட இடங்களில் சுமார் 300 காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் தமிழ்நாடு சிறப்பு படை காவல்துறையினர், மாவட்ட ஆயுதப் படை காவல்துறையினர், ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் தாலுகா காவல்துறையினர் என சுமார் 1000க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வாக்கு என்னும் நாளன்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என நாகப்பட்டினம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்கள்.

Tags

Next Story