திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் 1008 சங்காபிஷேகம்

சங்காபிஷேகம்

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாதம் சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேக சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது.யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய சங்குகளில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மேளத்தாளத்துடன் கோவில் உட்பிரகாரத்தில் சுற்றி வலம் வந்தனர்.பின்னர் சுவாமிக்கு 1008 சங்காபிஷேகம் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்ச மூர்த்திகளுக்கு பல்வேறு வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பிறகு வீதி உலா புறப்பாடு காட்சி நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

Tags

Next Story