விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்.

விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்.
விழுப்புரம் ஆதிவாலீஸ்வரர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்
பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
விழுப்புரம் பூந்தோட்டம் மேட்டுத்தெருவில் மிகவும் பிரசித்தி பெற்ற வாலாம்பிகை சமேத ஆதிவாலீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சோமவாரத்தை முன்னிட்டு 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி காலை 10 மணிக்கு வேள்வி வழிபாடு களும், பகல் 12.05 மணிக்கு 1008 சங்காபிஷேகமும் நடந்தது. தொடர்ந்து, மதியம் 1 மணிக்கு பேரொளி வழிபாடும், திருநீற்று பிரசாதம் வழங்குதலும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர். பக்தர் கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Tags

Next Story