உலக நன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம்

உலக நன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம்

கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு கோவில்பட்டி, கைலாசநாதா் மற்றும் செண்பகவல்லி அம்மன் கோயிலில், 1008 சங்காபிஷேகம் நடந்தது. 

கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு கோவில்பட்டி, கைலாசநாதா் மற்றும் செண்பகவல்லி அம்மன் கோயிலில், 1008 சங்காபிஷேகம் நடந்தது.
நத்தம் கோவில்பட்டியில் அமைந்துள்ள கைலாசநாதா் சமேத செண்பகவல்லி அம்மன் கோயிலில் சோமவாரத்தையொட்டி, உலக நன்மை வேண்டி 1008 சங்காபிஷேகம் நடைபெற்றது. மூலவா் கைலாசநாதா் செண்பகவல்லி அம்மனுக்கு பால், பழம், பன்னீா், விபூதி, சந்தனம், புஷ்பம் ,இளநீா், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டன. முன்னதாக கோயில் வளாகத்தில் 1008 சங்குகள், மலா்களைக் கொண்டு சிவலிங்கம் வடிவில் அலங்கரிக்கப்பட்டன. இந்த பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Tags

Next Story