1008 திருவிளக்கு பூஜை

விருதுநகர் அருள்மிகு ‌ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் சித்திரை பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 1008 திருவிளக்கு பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி என்.ஜி.ஓ நகரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயில் சித்திரை பொங்கல் உற்சவம் கடந்த 21-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காரியாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மாங்கல்யபாக்கியம், உடல் ஆரோக்கியம் வேண்டியும், தமிழகத்தில் நல்ல மழை பெய்து கோடைவெயிலின் தாக்கம் குறைந்திடவும், தட்டுப்பாடு இல்லாமல் குடிதண்ணீர் கிடைத்திட வேண்டியும், விவசாயம் செழித்து அனைவரும் நலமுடன் வாழ வேண்டியும் பஜனை பாடல் பாடி திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்டனர். இதில் 1008 திருவிளக்குகள் ஏற்றி வளையல், மஞ்சள் கயிறு உள்ளிட்டவற்றை விளக்குக்கு அணிவித்து வழிபாடு செய்தனர். பின்னர் கோயில் நிர்வாகத்தின் சார்பில் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

Tags

Next Story