உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு 100வது பிறந்த நாள்
உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடு பிறந்த நாள்: விவசாயிகள் மரியாதை விவசாயத்துக்கு, இலவச மின்சாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளுக்காக கட்டைவண்டி போராட்டம் நடத்தியவர் நாராயணசாமி. கோவை மாவட்டம், அன்னூர் வட்டம், கோவில்பாளையம் அருகே வையம்பாளையத்தில், தமிழக விவசாயிகள் சங்க நிறுவனர், மறைந்த நாராயணசாமி நாயுடுவின், 100வது பிறந்தநாள் மற்றும் குரு பூஜை விழா அவரது மணிமண்டபத்தில் நடந்தது.
இதில் உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்க மாநிலத்தலைவர் வேலுசாமி தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாநில பொதுச்செயலாளர் பழனிமுருகன், மாநில பொருளாளர் இராஜேஸ்சுந்தரம் மற்றும் முக்கிய நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். விவசாயிகளின் போராட்ட முறைகளை செழுமைப்படுத்தியவர்களில் முக்கியமானவரான தலைவராக நாராயணசாமி நாயுடு உள்ளார். தமிழக விவசாயிகள் சங்கம்’ என்ற புதிய அமைப்பை 1973-ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி துவங்கினார். அதன் தலைவராக நாராயணசாமி நாயுடு ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.