சம்பா சாகுபடிக்கு 1,014 டன் உரம் சரக்கு ரயிலில் புதுகை வந்தது
உரங்கள் லாரிகளில் அனுப்பி வைப்பு
புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்டத்தில் சாம்பா சாகுபடி பணியில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்காக தூத்துக்குடியில் இருந்து சரக்கு ரயில் மூலம் 21 பெட்டிகளில் நேற்று உரம் வந்தது. யூரியா 453 மெட்ரிக் டன், டிஏபி 244 டன், காம்ளக்ஸ் 317 டன் என்று மொத்தம் ஆயிரத்து 14 மெட்ரிக் டன் உர மூட்டைகள் தனியார் உரக்க டைகளுக்கு வழங்குவதற்காக 50க்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த மாதம் தூத்துக்குடியில் இருந்து வந்த உர மூட்டைகள் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் இப்போதைக்கு மாவட்டத்தில் உர தட்டுப்பாடு இருக்காது என்று வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags
Next Story