திருக்குவளையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் 101 வது பிறந்த நாள் விழா

திருக்குவளையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் 101 வது பிறந்த நாள் விழா

திருக்குவளையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் 101 வது பிறந்த நாள் விழாவில் என்.கெளதமன் தலைமையில் கழகத்தினர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திருக்குவளையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் 101 வது பிறந்த நாள் விழாவில் என்.கெளதமன் தலைமையில் கழகத்தினர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருக்குவளையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் 101 வது பிறந்த நாள் விழா. என்.கெளதமன் தலைமையில் கழகத்தினர் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் 101 வது பிறந்த நாளை முன்னிட்டு கலைஞர் பிறந்த இல்லத்தில் கலைஞர் திருஉருவசிலைக்கு மாவட்டக் கழகச் செயலாளர் என்.கெளதான் தலைமையில் கழகத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த இல்லம் உள்ளது.

கலைஞர் இல்லத்தில் கலைஞர் தந்தை பெயரில் முத்துவேலன் நூலகமாகவும், தாயார் பெயரில் அஞ்சுகம் படிப்பகமாக உள்ளது. இந்த இல்லத்தில் கலைஞருக்கு மார்பளவு வெண்கல சிலை உள்ளது. மேலும் கலைஞர் தந்தை முத்துவேலர், தாயார் அஞ்சுகம், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறன் ஆகியோரின் சிலை உள்ளது. இல்லத்தில் கலைஞர் முதல்வராக இருந்த போது தேசிய தலைவர்கள் சந்திப்பு, வெளிநாடு சுற்றுப்பயணம், தலைவர்கள் சந்திப்பு, கலைஞர் ஆட்சியின் சாதனை கொண்ட புகைப்படங்கள் உள்ளது.

கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அஞ்சுகம், முத்துவேலர் அறக்கட்டளை சார்பில் கலைஞர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாகை மாவட்டக் கழகச் செயலாளர் கௌதமன் தலைமையில் கழத்தினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கன். நிகழ்ச்சியில் மாநில விவசாய அணி துணைத் தலைவர் வேதரத்தினம், தலைமைச் செயற்குழு உறுபினர்கள் இல.மேகநாதன், ப.கோவிந்தரசசன், க.ராஜேந்திரன், மாவட்டக் கழக துணைச் செயலாளர்கள் சோ.ரவிச்சந்திரன், கற்பகம்,மாநில மீனவர் அணி துணைச் செயலாளர் ஜி.மனோகரன், பொதுக்குழு உறுப்பினர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து திருக்குவளை கடைத்தெருவில். திமுக கொடி ஏற்றி வைத்து கீழையூர் மேற்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் கலைஞர் பிறந்தநாள் நீர், மோர் பந்தல் திறந்து. அதைத் தொடர்ந்து கருணாலையா முதியோர் இல்லத்தில் உள்ளவர்களுக்கு உணவு மற்றும் புத்தாடை வழங்கட்டது

Tags

Next Story