சிவகிரியில் 102 டிகிரி வெப்பம் பதிவு - பொதுமக்கள் அவதி
சிவகிரியில் 102 டிகிரி வெப்பம் பதிவானதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் கோடை வெயில் கொளுத்தும் நிலையில் அக்னி நட்சத்திரம் முதல் நாளான நேற்று வெயில் தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது . இதனால் காலை 11 மணி முதல் மாலை 4:00 மணி வரை பொதுமக்கள் இல்லங்களிலேயே முடங்கி கிடந்தனர். உச்சி வெயில் அடித்த போது சாலைகளில் போக்குவரத்து குறைந்தது. இதில் சிவகிரி வட்டாரத்தில் அதிகபட்ச வெப்ப பதிவு 102 டிகிரியாக இருந்தது. வெயில் இறங்கிய பிறகும் வெப்ப தாக்கம் நீடித்தது. இதனால் குழந்தைகள் தங்களது வீட்டுக்குள் இருப்பதால் பெரும் அவதிப்பட்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Next Story