காஞ்சி தேர்தல் பணியில் பாதுகாப்பு படையினர்...1,020 பேர்!

காஞ்சி தேர்தல் பணியில் பாதுகாப்பு படையினர்...1,020 பேர்!

பாதுகாப்பு படை

காஞ்சி தேர்தல் பணியில் பாதுகாப்பு படையினர்...1,020 பேர்!:5 மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம்
காஞ்சிபுரம் மாவட்டத்தில், எஸ்.பி., தலைமையில், 670 போலீசார் மற்றும் 350 மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் என, 1,020 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சுற்றியுள்ள ஐந்து மாவட்ட எல்லைகளில், 11 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. தமிழகத்தில் லோக்சபா தேர்தல், வரும் 19ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வரும் நிலையில், காஞ்சிபுரம் தொகுதியில், தேர்தல் நடத்துவதற்கான பணிகளை, தேர்தல் நடத்தும் அதிகாரியான, கலெக்டர் கலைச்செல்வி தலைமையில் அதிகாரிகள் மேற்கொள்கின்றனர். இது ஒருபுறம் இருக்க, தேர்தலுக்கான பாதுகாப்பு பணிகளில், எஸ்.பி., சண்முகம் தலைமையில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 32 பேர் கைது காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,417 ஓட்டுச்சாவடிகளில் லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதில், சென்னை சிட்டி போலீசுக்கான பகுதிகள் போக, காஞ்சிபுரம் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 380 இடங்களில், 773 ஓட்டுச்சாவடிகள் அமைந்துள்ளன. இந்த பகுதிகளில் மேற்கொள்ள உள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து, எஸ்.பி., அலுவலகத்தில் தேர்தலுக்காகவே தனி பிரிவு ஒன்று துவங்கி முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஏற்கனவே, போலீசார் மற்றும் மத்திய தொழிலக பாதுகாப்பு படையினரும் சேர்ந்து, காஞ்சிபுரத்தில், வாக்காளர்களின் கவனத்திற்காக கொடி அணிவகுப்பு நடத்திய நிலையில், தேர்தலுக்கான சட்டம் - ஒழுங்கு விவகாரத்தில் போலீசார் தீவிர கவனம் செலுத்தியுள்ளனர். தேர்தல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, காஞ்சிபுரத்தில் முக்கிய ரவுடிகளின் பட்டியலில், சரித்திர பதிவேடு குற்றவாளிகளை அடையாளம் கண்டு, 32 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Tags

Next Story