மாமன்னன் ராஜராஜசோழனின் 1038-ம் ஆண்டு சதயவிழா
ராஜராஜசோழனின் 1038-ம் ஆண்டு சதயவிழா
மாமன்னன் ராஜராஜசோழனின் 1038-ம் ஆண்டு சதயவிழா திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது.
திருக்கோவிலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் தஞ்சையை தலைநகரமாக கொண்டு ஆண்ட மாமன்னன் ராஜராஜசோழனின் 1038-ம் ஆண்டு சதயவிழா திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு தமிழ்ச் சங்க தலைவர் சிங்கார உதியன் தலைமை தாங்கினார். டாக்டர் செந்தில், கலை இலக்கியப் பெருமன்ற தலைவர் கலியபெருமாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்ச்சங்க செயலாளர் பாரதிமணாளன் வரவேற்றார். பேராசிரியர் ரவிச்சந்திரன் தொடக்கவுரையாற்றினார். அறங்காவலர் குழு தலைவர் ஜெயசங்கர்,கல்வெட்டு ஆய்வாளர் விழுப்புரம் வீரராகவனுக்கு அருண்மொழிவர்மன் விருதையும், தேவ ஆசைத்தம்பி, சுகந்தி, புலவர் தங்க விசுவநாதன், சாய் ரமேஷ்பாபு, நல்ல பன்னீர்செல்வம் ஆகியோருக்கு திருமுறைச் செம்மல் விருதையும் வழங்கினார். தொடர்ந்து சதய விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கலை போட்டி, கலைநிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.
Next Story