103ம் ஆண்டு திரு அவதார மண்டகப்படி தரிசனம்
வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழாவை , சுவாமி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோயிலில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கடந்த மார்ச் 25ம் தேதி சுவாமி முள்ளிப்பாடி ஆற்றில் இறங்கி எதிர்சேவை முடித்து, கடந்த மார்ச் 26ம் தேதி முதல் பல்வேறு ஊர்களுக்கு ஊர்வலமாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.அதன்படி திண்டுக்கல் என்ஜிஓ காலனி, பாலகிருஷ்ணாபுரம், திருமலைச்சாமிபுரம், நாகல் நகர், பாரதிபுரம், சவுராஷ்ட்ரா ஆகிய இடங்களில் சுவாமி ஊர்வலமாக சென்றார்.
இந்நிலையில் நாகல் புதூர் பலிஜவாரு மற்றும் பொதுமக்கள் மகாஜன உறுப்பினர்களால் 103ம் ஆண்டு திரு அவதார மண்டகப்படியில் சுவாமி சேஷ வாகனத்தில் ராம அவதாரம், கிருஷ்ண அவதாரம், மோகினி அவதாரம் எடுத்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். நேற்று முன்தினம் சுவாமி புஷ்ப பல்லக்கில் கள்ளர் வேடம் அணிந்து மீண்டும் வடமதுரை கோயிலுக்கு புறப்பட்டார்.