10.5 சதவீத இட ஒதுக்கீடு கேட்டு ஆர்ப்பாட்டம்
Dindigul King 24x7 |24 Dec 2024 1:10 PM GMT
வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்தை அமல்படுத்தாத தமிழக அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மணிக்கூண்டு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு வழங்காத தமிழக அரசை கண்டித்து பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழக முழுவதும் கவன எதிர்பார்ப்பாட்டம் நடத்த மருத்துவர் ராமதாஸ் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்கம் இனணந்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்து 1000 ஆவது நாள் ஆகியும் வன்னியர்களுக்கு இடஒதுக்கீட்டு சட்டத்தை இயற்றாத தமிழக அரசை கண்டித்தும் , வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீட்டு சட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தியும் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது மாவட்டச் செயலாளர் ஜான்கென்னடி தலைமை வகித்தார். தொகுதி செயலாளர் சிற்றரசு, நவநீதகிருஷ்ணன், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் திருப்பதி வரவேற்புரையாற்றினார். மாநில பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன் கண்டன உரையாற்றினார். நிர்வாகிகள் ராபர்ட் கெமில்டன், முத்துராஜ், கனகராஜ்,,லில்லி , சுதா, குமார் ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், பாஸ்கரன், பிரபாகரன், வைகைபாலன், ஆனந்தகிருஷ்ணன்,செல்வராஜ், இராமுத்தாய்,, அன்புமுருகன், பெரியசாமி, நாகராஜ்,பாலாஜி, சிவக்குமார், நவநீதகிருஷ்ணன்,ஆரோக்கியதாஸ், செபஸ்தியார், ராஜசேகரன், கார்த்திக், நல்லேந்திரன், சிறுமணி, கருணா. மகேஸ்வரன் ராஜேந்திரன் கோபி, சிற்றரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story