10.58 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்திற்கு பூமி பூஜை அமைச்சர் எம்பி பங்கேற்பு..

10.58 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்திற்கு பூமி பூஜை அமைச்சர் எம்பி பங்கேற்பு..
10.58 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்திற்கு பூமி பூஜை அமைச்சர் எம்பி பங்கேற்பு..
ராசிபுரம் அடுத்த அணைப்பாளையம் பகுதியில் ரூ.10.58 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் அடிக்கல் நாட்டினர்... நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரின் மையப்பகுதியில் தற்போது புதிய பேருந்து நிலையம் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு பேருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில் நகரின் வளர்ச்சியின் காரணமாக மற்றும் பெருகிவரும் மக்கள் தொகை,போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ராசிபுரம் நகரின் மையப்பகுதியிலிருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள புறவழிச் சாலையை ஒட்டி புதியதாக பேருந்து நிலையம் அமைக்க சுமார் 7 ஏக்கர் நிலம் தானமாக பெறப்பட்டு நிலையில் தற்போது ரூ.10.58 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பணியானது மேற்கொள்ளப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று அணைபாளையம் அருகே புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக மாநிலங்களவை உறுப்பினர் KRN.ராஜேஷ் குமார்,ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக அடிக்கல் நாட்டினர். புதிதாக அமையுள்ள பேருந்து நிலையத்தில் 52 கடைகள்,30பேருந்து நிறுத்தமிடம்,2உணவு விடுதிகள்,இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம்,நேரக் காப்பாளர் அறை, காவலர் அறை,தாய்மார்கள் பாலூட்டும் அறை பல்வேறு வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் கூடிய விரைவில் அமைய உள்ளது.நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள்,அரசு அதிகாரிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்...
Next Story