107 வயது ஓய்வூதியருக்கு உயிர் வாழ் சான்று வழங்கல்!

X
தூத்துக்குடி மாவட்டம் நாசரேத்தைச் சேர்ந்த 107 வயது ஓய்வூதியருக்கு உயிர்வாழ் சான்று வழங்கப்பட்டது. தமிழ் நாடு அரசு ஓய்வூதியர்கள் நேர்காணல் ஓய்வூதியம் பெறுபவர்கள் தங்களது பிறந்த நாள் மாதத்திலும் அடுத்து 30 நாட்கள் சலுகை காலத்திலும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்கள் ஓய்வூதியம் பெற்ற மாதத்திலும் அடுத்து 30 நாட்கள் சலுகை காலத்திலும் நேர்காணல் செய்து கொள்ளலாம். 2025-26 ஆண்டிற்கான நேர்காணல் ஏப்ரல் 1-ம் தேதி முதல் துவங்கி நடை பெற்று வருகிறது. நாசரேத் பேரூராட்சி சாமு ஞானவிலாஸ் தெருவில் குடியிருந்து வரும் டேனியல் சுந்தரராஜ் என்பவர் கோயம்புத்தூர் விவசாய பல்கலைக்கழகத்தில் முனைவர் ஆக பணியாற்றி ஓய்வு பெற்றார். கடந்த 48 ஆண்டுகளாக ஓய்வூதியம் பெற்று 107 ஆண்டுகளை கடந்துள்ளார். அவருக்கு கடந்த 7 ஆண்டுகளாக ஸ்ரீவைகுண்டம் கருவூல அலுவலர் மற்றும் ஓய்வூதியர்கள் வட்ட தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி ஆகியோர் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று நேர்காணல் செய்தனர். இந்த ஆண்டும் கூடுதல் உதவி கருவூல அலுவலர் அன்னாள் ஞான பாக்கியம் ஓய்வூதியர்கள் வட்ட தலைவர் ராஜப்பா வெங்கடாச்சாரி நேரில் சென்று டேனியல் சுந்தரராஜ் - ஐ சந்தித்து ஆசி பெற்றார்கள். அவருடன் நாசரேத் வட்டார துணைத் தலைவர் சந்திர சேகர். பொருளாளர் ஜான். செயற்குழு சார்லஸ். ஆகியோர் உடனிருந்தனர். பின்னர் வயது முதிர்வின் காரணமாக பயோ மெட்ரிக் முறையில் கைரேகை மற்றும் விழித்திரை வழியாக நேர்காணல் இயலாததால் மருத்துவர் தாமஸ் கிங்ஸ்லியின் உயிர் வாழ் சான்றிதழ் பெற்று வந்தனர்.
Next Story

