தர்மபுரியில் 1,070 தபால் வாக்குகள் செல்லாதவை

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பதிவான 10,074 தபால் வாக்குகளில் 1,070 தபால் வாக்குகள் செல்லாதவை என கணக்கிடப்பட்டுள்ளது.

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 15 லட்சத்து 24 ஆயிரத்து 896 வாக்காளர்கள் உள்ளனர். நடந்து முடிந்த, தேர்தலில் 12 லட்சத்து 38 ஆயிரத்து 183 வாக்காளர்கள் வாக்களித்தனர்.மேலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் 80 வயதுக்கும் மேற்பட்டவர்கள் என 10,074 பேர் தங்களின் தபால் வாக்கை பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று தர்மபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரியில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங் கியது. இதில் 1,070 வாக்குகள் செல்லாத வாக்குகளாக வீணாகியது. 105 பேர் தங்களின் தபால் வாக்குகளை நோட்டாவுக்கு போட்டிருந்தனர். தவிர, தபால் வாக்குகளில் திமுகவுக்கு 3,366 வாக்குகளும், அதிமுக 2,039ம், பாமக 2,922ம் மற்றும் நாம் தமிழர் கட்சி 805 வாக்குகளும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story