கூட்டுறவு வாரவிழாவில் ரூ.10.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

கூட்டுறவு வாரவிழாவில் ரூ.10.78 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
கூட்டுறவு வார விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

தஞ்சாவூரில் கூட்டுறவுத் துறை சார்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற 70- ஆவது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் 2 ஆயிரத்து 315 பயனாளிகளுக்கு ரூ.10 கோடியே 78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. விழாவுக்கு மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார்.

இவ்விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும், 26 கூட்டுறவு சங்கங்களுக்கு விருதுகளையும், கூட்டுறவு வார விழா பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களையும் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார்.

விழாவில் தமிழக அரசின் தலைமைக் கொறடா கோவி. செழியன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.கல்யாணசுந்தரம், செ. இராமலிங்கம், சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திரு வையாறு). டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), கா. அண்ணாதுரை (பட்டுக்கோட்டை), மேயர் சண்.இராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட ஊராட்சித் தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, துணைத்தலைவர் சு.க.முத்துசெல்வம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப் பதிவாளர் (பொ) ஜெ.பழனீஸ்வரி, இணைப் பதிவாளர் வெ.பெரியசாமி, துணைப் பதிவாளர் சௌ. அப்துல்மஜீத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story