108 பயனாளிகளுக்கு ரூ.08.26 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகள்

108 பயனாளிகளுக்கு ரூ.08.26 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட  உதவிகள்
X
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் 108 பயனாளிகளுக்கு ரூ.08.26 இலட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கல்லங்குடி கிராமத்தில், இன்று (08.01.2025) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் பயனாளிகளுக்கு அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகளை, வழங்கி தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் தநலனைக் கருத்தில் கொண்டு, பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்து, அனைத்துத்தரப்பு மக்களையும் பயன்பெறச் செய்து வருகிறார்கள். பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில், அரசின் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு நேரடியாக வழங்கிடும் பொருட்டு, ஒவ்வொரு மாதமும் ஒரு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தினை தேர்ந்தெடுத்து, அதிலுள்ள கடைக்கோடி கிராமத்திற்கு சென்று, பொதுமக்களின் கோரிக்கைகளைப் பெற்று, தகுதியுடைய பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கென ஒவ்வொரு மாதமும் மக்கள் தொடர்பு முகாம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்றையதினம் தேவகோட்டை வட்டத்திற்குட்பட்ட கல்லங்குடி கிராமத்தில் நடைபெற்று கொண்டிருக்கும், இம்மக்கள் தொடர்பு முகாமின் மூலம் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து துறை சார்ந்த முதன்மை அலுவலர்கள் விரிவாக மக்களுக்கு எடுத்துரைத்துள்ளனர். இம்மக்கள் தொடர்பு முகாமினை முன்னிட்டு, முன்னதாக பொதுமக்களின் தேவைகள் மற்றும் நலத்திட்டங்கள் தொடர்பாக கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அதில் தகுதியுடைய மனுக்கள் மீது உடன் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, அம்மனுதாரர்களுக்கு நலத்திட்ட உதவிகளும், அதன் பயன்களும் இன்றைய தினம் வழங்கப்படவுள்ளன. இன்றைய தினமும் இம்முகாமின் வாயிலாக பெறப்படும் கோரிக்கை மனுக்களில் தகுதியுடைய மனுக்கள் மீதும் உடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு உரிய பலன்கள் வழங்கப்படும். இவ்வூராட்சியை பொறுத்த வரையில், இப்பகுதியில் பொதுமக்களுக்கு பயனுள்ள வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிவருவது மட்டுமன்றி, அனைத்து அடிப்படை வசதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதுதவிர, தங்களது கிராமத்தினை மாதிரி கிரமமாக உருவெடுத்திடும் பொருட்டு, அனைத்திலும் சிறந்து விளங்கிடும் வகையில் கிராம மக்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இருந்திட வேண்டும். குறிப்பாக, கிராமப்புறம் முழுவதும் தூய்மையை பேணிக்காத்து, தங்களது சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்து கொண்டு, சுகாதாரமான கிராமமாக பாதுகாத்திட வேண்டும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் உயர்கல்வியை ஊக்குவித்து, அவர்களுக்கு உறுதுணையாக இருந்திட வேண்டும். உயர்கல்விக்கென அரசால் தமிழ்ப் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம் போன்ற திட்டங்கள் வாயிலாக மாதந்தோறும் ரூ.1,000/- உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உயர்கல்வி கற்பதன் அடிப்படையில், வேலைவாய்ப்புக்களும் எளிதில் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளது. இதுதவிர, பல்வேறு கல்விக்கடனுதவிகளும் வழங்கிட அரசால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இக்கிராமத்தில், பல்வேறு மேம்பாடு வசதிகள் மற்றும் தங்களின் தேவைகள் குறித்து பெறப்பட்டுள்ள மனுக்களில், தகுதியுடைய மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் உடன் மேற்கொள்ளப்பட்டு, அதற்குரிய பலன்கள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார். முன்னதாக, இம்மக்கள் தொடர்பு முகாமில் அரசின் பல்வேறு துறைகள் ரீதியாக அமைக்கப்பட்டிருந்த செயல்விளக்க கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில், 22 பயனாளிகளுக்கு தலா ரூ.30,000/- வீதம் மொத்தம் ரூ.6,60,000/- மதிப்பீட்டிலான இலவச வீட்டுமனைப்பாட்டாக்கான ஆணைகளையும், 14 பயனாளிகளுக்கு ஆதிதிராவிடர் கணினி இ-பட்டாக்கான ஆணைகளையும், 17 பயனாளிகளுக்கு பட்டா மாறுதலுக்கான ஆணைகளையும், 08 பயனாளிகளுக்கு வாரிசு சான்றுகளையும், 09 பயனாளிகளுக்கு விதவை சான்றுகளையும், 03 பயனாளிகளுக்கு சிறு-குறு விவாசாயி சான்றுகளையும், 01 பயனாளிக்கு கணவனால் கைவிடப்பட்டவருக்கான சான்றினையும், 01 பயனாளிக்கு முதல் பட்டாதாரிக்கான சான்றினையும், 01 பயனாளிக்கு இரண்டு பெண் குழந்தைகள் திட்டத்திற்கான சான்றினையும், 10 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளையும், வேளாண்மைத்துறையின் சார்பில் 06 விவசாயிகளுக்கு ரூ.3,320/- மதிப்பீட்டிலான கேழ்வரகு விதை, ஆடாதோடா, நொச்சி கன்றுகள், மண்புழு உரப்படுக்கை ஆகிய வேளாண் இடுபொருட்களையும்,01 விவாசாயிக்கு ரூ.6,000/- மதிப்பீட்டிலான பேட்டரி தெளிப்பான், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 02 பயனாளிகளுக்கு ரூ.21,349/- மதிப்பீட்டிலான பரப்பு விரிவாக்கம் கொய்யா மற்றும் காய்கறி சாகுபடிக்கான இடுபொருட்களையும், பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறையின் சார்பில் 05 பயனாளிகளுக்கு டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் தலா ரூ.3,000/- வீதம் மொத்தம் ரூ.15,000/- மதிப்பீட்டிலான நிதியுதவிக்கான ஆணையினையும், 05 கர்ப்பிணி தாய்மார்களுக்கு தலா ரூ.2,000/- வீதம் மொத்தம் ரூ.10,000/-மதிப்பீட்டிலான ஊட்டச்சத்து பெட்டகங்களையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,01,800/- மதிப்பீட்டிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டரினையும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.2,460 மதிப்பீட்டிலான காதொலி கருவினையும், 01 மாற்றுத்திறனாளிக்கு ரூ.6,350 மதிப்பீட்டிலான தையல் இயந்திரத்தினையும் என ஆக மொத்தம் 108 பயனாளிகளுக்கு ரூ.8,26,279‬/- மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார். மேலும், மாவட்டம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் ”யாவரும் கேளிர்” திட்டத்தின் கீழ் பல்வேறு போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் கல்லங்குடி நடுநிலைப்பள்ளியில் ”யாவரும் கேளிர்” திட்டத்தின் படி பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்ற ஓட்டப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வழங்கினார். தேவகோட்டை சார் ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வட்ஸ், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) (பொ) ஜெயமணி, இணை பதிவாளர் (கூட்டுறவு சங்கங்கள்) இராஜேந்திர பிரசாத், தேவகோட்டை வட்டாட்சியர் சேதுநம்பு மற்றும் அனைத்து துறை அரசு முதல்நிலை அலுவலர்கள், பொதுமக்கள், பயனாளிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story