108 ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் பணி - ஆட்கள் தேர்வு

108 ஆம்புலன்ஸ் அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் பணி - ஆட்கள் தேர்வு
X

108 ஆம்புலன்ஸ்

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் 108 ஆம்புலன்ஸ் சேவையில், அவசர மருத்துவ தொழில்நுட்ப வல்லுநர் பணிக்கு ஆட்கள் தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை பொது மருத்துவமனையில் நடைபெற உள்ளது. மேலும் இதில் 19 வயது நிறைவடைந்து 30 வயதிற்க்குட்பட்ட ஆண், பெண் இருபாலரும் கலந்து கொள்ளலாம், இதற்கான கல்வி தகுதி, B,SC நர்சிங், ANM, GNM, DMLT, Dip in Pharmacy Any Life Science Graduates மற்றும் B.Sc. Micro Biology, Zoology, Botany, Bio Chemistry, Bio Technology, Plant Biology ஆகிய ஏதேனும் படிப்பை முடித்திருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ. 16,020,வழங்கப்படும் மேலும் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 50 நாள் பயிற்சி வழங்கப்படும், தேர்வுக்கு வருபவர்கள் அவசியம் தங்களது அசல் சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளை எடுத்து வர வேண்டும், பயிற்சியில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தங்கும் வசதியுடன் பயிற்சி வழங்கப்படும் இரவு பகல் என பணிகள் மாறி மாறி வழங்கப்படும். இது பற்றிய மேலும் விவரங்களுக்கு 9154251362 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்/ என பெரம்பலூர் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story