ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் சார்பில் 108 பால்குடம் ஊர்வலம் !
ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில்
தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் இந்து சைவ வெள்ளாளர் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ துர்க்கை அம்மன் கோவில் ஆனிக் கொடைவிழா நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலையில் துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மா காப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
உலக நலன் வேண்டி 108 பால்குடம் ஊர்வலம் பிள்ளையார் கோவிலில் இருந்து புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. தொடர்ந்து அம்மனுக்கு பால் அபிஷேகத்தை தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதனையடுத்து மேட்டுக்காளி பாலகன் திருப்பதி வில்லிசை கச்சேரி நடைபெற்றது.
தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மன் வெண்கல அக்கினிசட்டி மற்றும் முளைப்பாலிகை ஏந்தி திருத்தேர் ஊர்வலம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை தலைவர் சுடலைவேல் முருகன், நிர்வாகிகள் துரைராஜ் பிள்ளை, சண்முகசுந்தரம், குருசாமி, ஈஸ்வரபாண்டின், சுப்ரமணிய ஜீவா, மாரியப்பன், புதியராஜா உட்பட நிர்வாகிகள் செய்திருந்தனர்.