மோகனூர் ஆதிபகவதியம்மன் ஆலயத்தில் 108 சங்கு பூஜை!

மோகனூர் ஆதிபகவதியம்மன் ஆலயத்தில் நடந்த 108 சங்கு அபிஷேக பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், மோகனூர் தெற்கு தெருவில் உள்ள அருள்மிகு ஆதிபகவதியம்மன் ஆலய கும்பாபிஷேகம் நிறைவுற்ற ஒராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு 108 சங்கு அபிஷேகம் மிக விமர்சையாக நடைபெற்றது. முன்னதாக காலை மோகனூர் காவிரியாற்றிலிருந்து பால்குடம்,தீர்த்தம் குடம் எடுத்து வரும் நிகழ்வும் பின் மாலை கோவிலில் வளாகத்தில் 108 சங்கு பூஜையை மிக விமர்சையாக நடைபெற்றன.

விநாயகர் வழிபாட்டுடன் துவங்கி சிறப்பு யாகவேள்வி பின் பூர்ணாகதியுடன் 108 சங்கு அபிஷேகம் மூலவர் ஆதி பகவதியம்மனுக்கு சிவாச்சாரியார்கள் மிக விமர்சையாக நடத்தினர். பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்ச தீபம் உட்பட மஹா தீபம் காண்பிக்கப்பட்டன அப்போது அங்குள்ள விநாயகர் முருகப்பெருமானுக்கு சிறப்பு மஹா தீபம் காண்பிக்கபட்டன இதில் ஏராளாமான பக்தர்கள் கலந்து கொண்டனர் வருகை புரிந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags

Next Story