அண்டபாண்டீஸ்வரா் கோயிலில் 108 சங்கு அபிஷேக வழிபாடு

அண்டபாண்டீஸ்வரா் கோயிலில் 108 சங்கு அபிஷேக வழிபாடு

108 சங்கு அபிஷேக வழிபாடு 

மதுராந்தகம் அடுத்த அண்டவாக்கம் காமாட்சி உடனுறை அண்டபாண்டீஸ்வரா் கோயிலில் வருட பூா்த்தியை முன்னிட்டு, 108 சங்கு அபிஷேக வழிபாடு நடைபெற்றது.
அண்டவாக்கம் காமாட்சி உடனுறை அண்டபாண்டீஸ்வரா் கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்று வருட பூா்த்தியானதை அடுத்து, 108 சங்கு அபிஷேகம், வேள்வி பூஜை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டன. சனிக்கிழமை காலை மூலவா்களான காமாட்சியம்மன், அண்டபாண்டீஸ்வரா் ஆகிய சிலைகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் கோயில் வளாகத்தில் 108 சங்குகள் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா் சங்குகளால் சுவாமிகளுக்கு வேத விற்பன்னா்களால் புனிதநீா் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து வேள்விபூஜைகள், அன்ன தான நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில், அண்டவாக்கம் கிராமத்தைச் சுற்றியுள்ள வேடவாக்கம், புதுபட்டு உள்ளிட்ட கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழா குழுவினா், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.

Tags

Next Story