சேலத்தில் 108 தேச திவ்ய பெருமாள் தரிசன நிகழ்ச்சி 3 நாட்கள் நீட்டிப்பு

சேலத்தில் 108 தேச திவ்ய பெருமாள் தரிசன நிகழ்ச்சி 3 நாட்கள் நீட்டிப்பு

திவ்ய தரிசன நிகழ்ச்சி

சேலத்தில் நடைபெறுகிற108 தேச திவ்ய பெருமாள் தரிசன நிகழ்ச்சி 17-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

சேலம் 3 ரோடு வரலட்சுமி மகாலில் 108 பெருமாள் தரிசன நிகழ்ச்சி நடந்து வருகிறது. இதில் சேலம், நாமக்கல் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானவர்கள் வந்து தினமும் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த தரிசனம் நேற்றுடன் நிறைவடைந்தது. பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 108 பெருமாள் தரிசன நிகழ்ச்சி மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதாவது இன்று (திங்கட்கிழமை) முதல் 17-ந் தேதி (புதன்கிழமை) வரை நடக்கிறது. இந்த 3 நாட்களில் தினமும் கோமாதா பூஜையுடன் விஸ்வரூப தரிசனம், சுப்ரபாதம், திருவாராதனம், தீபாராதனை, சாற்றுமுறை, தீர்த்த கோஷ்டி, பிரசாதம், கல்யாண உற்சவம் (உச்சிக்கால பூஜை), ஊஞ்சல் சேவை, திருவாராதனம், சயன பூஜை, ஏகாந்த சேவை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் திருச்சி ஸ்ரீரங்கநாதர், திருவனந்தபுரம் அனந்தபத்மநாபசாமி, திருப்பாற்கடல் ஸ்ரீபதிநாதர், திருப்பதி ஸ்ரீதிருவேங்கமுடையான் தாயார் பத்மாவதி, திருப்பரமபதம் ஸ்ரீபரமபதநாதர் உள்ளிட்ட 108 பெருமாள்களும் தரிசனம் அளிக்கிறார்கள். இதற்கிடையே பொங்கல் பண்டிகையையொட்டி இன்று சிறப்பு பூஜை, விளையாட்டு போட்டிகள், சமத்துவ பொங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. இதற்கான ஏற்பாடுகளை சேலம் என்.ஜே. ஈவன்ட்ஸ் ஸ்பார்கிளிங் ஸ்டார்ஸ் நிர்வாக இயக்குனர்கள் நிஷாந்த், விக்னேஷ், ஸ்ரீராஜ கணேஷ் ஆகியோர் செய்துள்ளனர்.

Tags

Next Story