பாஜக ஆட்சியில் 108 முறை பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வு - திருச்சி சிவா

பாஜக ஆட்சியில் 108 முறை பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வு  - திருச்சி சிவா

திருச்சி சிவா பிரசாரம்  

மோடி ஆட்சி பொறுப்பேற்ற பத்தாண்டு காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, விலைகளை உயர்த்தி உள்ளார்,மத்திய அரசு விவசாயிகள் கடனை தீர்க்கவில்லை. மாணவர்கள் பெற்ற கல்வி கடனை தள்ளுபடி செய்யவில்லை. ஆனால் பத்தாயிரம் கோடி கடனை பணக்கார தனி நபர்களுக்கு இந்த மத்திய அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது, மாணவர்கள் மூன்று லட்ச ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தவில்லை.அதனால் அவர் எங்கு சென்றாலும் சிபில் உள்ளது என்பதால் தனது பெயரில் பத்து ரூபாய் கடன் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர் என பிரசாரத்தின் போது திருச்சி சிவா பேசினார்.

திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளரை ஆதரித்து எம்.பி.திருச்சி சிவா பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது, நாடு விடுதலை பெற்ற பின்பு 17 பொது தேர்தல் நடைபெற்றுள்ளது, தற்போது நடைபெறுவது 18 ஆவது தேர்தல். இந்த தேர்தல் முற்றிலும் மாறுபட்ட ஒன்று, இந்த தேர்தலில் நீங்கள் அளிக்கப் போகின்ற ஒற்றை வாக்குதான் எதிர்கால இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருக்குமா அல்லது எதேச்சய நாடாக மாறுமா, இந்துக்கள் இஸ்லாமியர்கள் கிறிஸ்தவர்கள் சீக்கியர்கள் அண்ணன் தம்பிகளாக வாழுகின்ற நாட்டில் ஒரு மதம் மட்டும் ஆக்கிரமிக்கின்ற நிலை வருமா, தமிழ் தெலுங்கு, பஞ்சாபி, மலையாளம் என எளிமையாய் பேசி இணைந்து இருக்கும் இந்நாட்டில் ஒரு மொழி மட்டுமே இருக்குமா? இந்தி என்ற ஒரு மொழி மட்டுமே இருக்குமா? என்ற கேள்வி உங்கள் முன்னால், இதெல்லாம் அடிப்படையில் சந்தேகத்தின் பால் எழுப்பப்பட்டவை அல்ல,

கடந்த பத்து ஆண்டுகாலமாக டெல்லியில் ஆட்சி செய்து கொண்டிருந்த நரேந்திரமோடி இயற்றிய சட்டங்கள் எல்லாம் சிறுபான்மையருக்கு எதிராக, ஒரு ஆட்சி என்பது நாட்டு மக்களின் சரிசமமாக கருதபட வேண்டிய ஒன்று, இந்திய நாட்டிற்கு உரிய தனிப்பெரும் தன்மை மதசார்பற்ற நாடு என்பது, கூட்டாட்சி தத்துவங்களின் அடிப்படையில் மாநிலங்களின் ஒருங்கிணைப்பில் நடைபெறக்கூடிய நாடு, மாநிலங்களின் தொகுப்பு இல்லை என்றால் இந்தியா என்ற ஒன்று கிடையாது,

மோடி ஆட்சி பொறுப்பேற்ற பத்தாண்டு காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, விலைகளை உயர்த்தி உள்ளார்,மத்திய அரசு விவசாயிகள் கடனை தீர்க்கவில்லை. மாணவர்கள் பெற்ற கல்வி கடனை தள்ளுபடி செய்யவில்லை. ஆனால் பத்தாயிரம் கோடி கடனை பணக்கார தனி நபர்களுக்கு இந்த மத்திய அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது, மாணவர்கள் மூன்று லட்ச ரூபாய் கடன் வாங்கி திருப்பி செலுத்தவில்லை.அதனால் அவர் எங்கு சென்றாலும் சிபில் உள்ளது என்பதால் தனது பெயரில் பத்து ரூபாய் கடன் கூட வாங்க முடியாத நிலையில் உள்ளனர், ஆனால் ரூபாய் 10 ஆயிரம் கோடி ரூபாய் கடனை தனியாருக்காக மத்திய அரசாங்கம் தள்ளுபடி செய்துள்ளது, இத்தகைய அரசாங்கம் தொடர வேண்டுமா வேண்டாமா மக்கள் தான் தீர்ப்பு சொல்ல வேண்டும், இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஸ்டாலின் கை காட்டும் ஒருவர் தான் பிரதமராக வரும் போது விவசாயிகள் கடனை வட்டியோடு நாங்கள் தள்ளுபடி செய்வோம், மாணவர்கள் வாங்கிய கல்வி கடனை தள்ளுபடி செய்வோம், என பேசி பொதுமக்களிடம்உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகள் கேட்டார்.

இந்த பிரசாரத்தின் போது நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, முசிறி சட்டமன்ற உறுப்பினர் காடுவெட்டி தியாகராஜன், ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் சிவக்குமார் மற்றும் ஒன்றிய நகர பேரூர் கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் பொதுமக்கள் பங்கேற்றனர்.

Tags

Next Story