10ம் வகுப்பு பொதுத்தேர்வு : தூத்துக்குடியில் 94.39% தேர்ச்சி

10ம் வகுப்பு பொதுத்தேர்வு : தூத்துக்குடியில்  94.39% தேர்ச்சி

பைல் படம் 

தூத்துக்குடி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ மாணவிகளில் 94.39% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை tnresults.nic.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், மாணவ, மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன்களுக்கும் தேர்வு முடிவுகள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் இத்தேர்வை 21 ஆயிரத்து 843 மாணவா்- மாணவிகள் எழுதினர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 20 ஆயிரத்து 618 மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் 94.39% ஆகும். தூத்துக்குடி மாவட்டத்தில் வழக்கம்போல் மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 10,534 மாணவர்கள் எழுதினர். இதில் 9,645பேர் தேர்ச்சி (91.56%) பெற்றுள்ளனர். மாணவிகள் 11,309 பேர் தேர்வு எழுதினர். இதில் 10,973பேர் தேர்ச்சி 97.03% பெற்றுள்ளனர். தேர்வு முடிவுகள் tnresults.nic.in என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேலும், மாணவ, மாணவர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன்களுக்கும் தேர்வு முடிவுகள் நேரடியாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story