குமரியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு 116 மையங்களில் இன்று தொடங்கியது

குமரியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு 116 மையங்களில் இன்று தொடங்கியது

 பொதுத் தேர்வு

குமரியில் பத்தாம் வகுப்பு பொது தேர்வு 116 மையங்களில் இன்று தொடங்கியது. 22 731 பேர் எழுதினார்கள்.
தமிழக முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் இன்று தொடங்கியது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம் கல்வி மாவட்டங்களை சேர்ந்த 431 பள்ளிகளில் இருந்து மொத்தம் 22 ஆயிரத்து 731 மாணவ மாணவியர் எந்த ஆண்டு இந்த தேர்வுகளை இன்று எழுதினர். மார்த்தாண்டம் கல்வி மாவட்டத்தில் 231 பள்ளிகளை சேர்ந்த 11 ஆயிரத்து 464 பேர்களும், நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் 198 பள்ளிகளை சேர்ந்த 11,237 மாணவ மாணவியரும் தேர்வுகளை எழுதுகின்றனர். இதில் மார்த்தாண்டத்தில் 67 தேர்வு மையங்களும் நாகர்கோவிலில் 49 தேர்வு மையங்களும் என்று என 116 மையங்களில் தேர்வுகள் நடைபெற்றது. இன்று 26 ஆம் தேதி தமிழ், இதர மொழிப்பாடம் தேர்வு நடந்தது. 28ஆம் தேதி ஆங்கிலம், ஏப்ரல் ஒன்றாம் தேதி கணிதம், நான்காம் தேதி அறிவியல், ஆறாம் தேதி விருப்ப வழி பாடம், ஏப்ரல் எட்டாம் தேதி சமூக அறிவியல் பாடத் தேர்வுகள் நடைபெறுகிறது.

Tags

Next Story