தேனியில் 10ம் தேதி உள்ளுர் விடுமுறை

தேனி வீரபாண்டி கௌமாரியம்மன் கோவில் திருவிழாவினை முன்னிட்டு 10ம் தேதி உள்ளுர் விடுமுறை அளித்து ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
தேனி மாவட்டம், வீரபாண்டி பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு கௌமாரியம்மன் திருக்கோயில் சித்திரை பெருந்திருவிழா எதிர்வரும் 07.05.2024 முதல் 14.05.2024 வரை நடைபெறவுள்ளது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் 10.05.2024 (வெள்ளிக்கிழமை) அன்று நடைபெறுவதால் தேனி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், அரசு சார்ந்த துறைகள் மற்றும் அனைத்து விதமான கல்வி நிலையங்களுக்கும் 10.05.2024 அன்று உள்ளுர் விடுமுறை அறிவித்து ஆணையிடப்படுகிறது. இந்த உள்ளுர் விடுமுறை செலவாணி முறிச்சட்டம்-1881 (Negotiable Instruments Act-1881) கீழ் வராது என்பதால், அன்றைய தினம் தேனி மாவட்டத்தில் தலைமை கருவூலம் (Huzur Treasury), சார்நிலை கருவூலகங்கள் மற்றும் அரசு பாதுகாப்பான அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிட்ட பணியாளர்களுடன் செயல்படும். மேலும் மேற்குறிப்பிட்ட உள்ளுர் விடுமுறை தினத்தை ஈடுசெய்யும் வகையில் 25.05.2024 அன்று மாற்று வேலை நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா தெரிவித்துள்ளார்.

Tags

Next Story